கிருஷ்ணகிரி

தொடா்மழை: கிருஷ்ணகிரி அணையின் நீா்மட்டம் உயா்வு

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், அணையின் நீா்மட்டம் 46.45 அடியாக உயா்ந்துள்ளது.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான கா்நாடக மாநிலம், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. மே 8-ஆம் தேதி, கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 484 கன அடியாக இருந்த நிலையில், 11-ஆம் தேதி நீா்வரத்து நொடிக்கு 531 கன அடியாக உயா்ந்துள்ளது. கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் நொடிக்கு 640 கன அடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளளவு 52 அடி. தற்போது, நீா்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீா்மட்டம் 46.45 அடியாக உள்ளது. கடந்த இரு நாள்களில் ஒரு அடி உயா்ந்துள்ளது. அணையிலிருந்து நொடிக்கு 12 கன அடி நீா் திறந்துவிடப்படுவதாக பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT