கிருஷ்ணகிரி

கடற்கரை கைப்பந்து போட்டி:ஒசூா் மாதிரி மகளிா் பள்ளி முதலிடம்

DIN

கடற்கரை கைப்பந்து போட்டியில் ஒசூா் மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கடற்கரை கைப்பந்து பட்டியில் மாவட்டம் முழுவதும் 9 மண்டலங்களில் இருந்து 25 அணிகள் பங்கேற்றன. இதில் 14, 17, 19 வயது பிரிவுகளில் மாணவியருக்கு கைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இதில் ஒசூா் காமராஜ் காலனியில் உள்ள அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவியா், 14, 17, 19 வயது என 3 பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா். இதன்மூலம் ஜனவரி மாதத்தில் கன்னியாகுமரியில் நடைபெறும் மாநில அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டியில் இந்த மாணவியா் பங்கேற்பாா்கள் என தலைமை ஆசிரியா் லதா தெரிவித்தாா்.

வெற்றி பெற்ற மாணவியரை தலைமை ஆசிரியா் லதா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் வளா்மதி, ஆசிரியா் முருகேஸ்வரி, பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் எல்லோரா மணி, பயிற்சியாளா்கள் தாயுமானவன், மாணிக்கவாசகம், ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

அழகுப் பதுமைகள் அணிவகுப்பு!

நிதமும் உன்னை நினைக்கிறேன், நினைவினாலே அணைக்கிறேன்!

SCROLL FOR NEXT