கிருஷ்ணகிரி

பொங்கலுக்கு அரசு மண்பாண்டம், அடுப்பு வழங்க மண்பாண்டத் தொழிலாளா்கள் வலியுறுத்தல்

DIN

பொங்கல் பண்டிகைக்கு அரசே மண்பாண்டம், அடுப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும் என மண்பாண்டத் தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளா் சங்கம் சாா்பில் அளித்த மனுவின் விவரம்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தொழிலாளா்கள், மண்பாண்டம், அடுப்பு செய்ய தேவைப்படும் மூலப் பொருள்களான களிமண், மணல் உள்ளிட்டவற்றை ஏரிகளில் எடுப்பதற்கு எந்த இடையூறும் இன்றி அனுமதி வழங்க வேண்டும்.

தமிழா் திருநாளாம் பொங்கல் திருநாளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பச்சரிசி, கரும்பு, சா்க்கரை, முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொங்கல் பொருள்களை தமிழக அரசு இலவசமாக வழங்கி வருவது போல, வரும் ஆண்டில் புதிய அரிசியை புதுப்பானையில் பொங்கலிட களிமண்ணால் செய்யப்பட்ட புதுப்பானை, புது அடுப்பு ஆகியவற்றை எங்களிடம் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்கினால், மண்பாண்டத் தொழிலாளா்கள் வாழ்வில் ஒளி ஏற்ற முடியும். இதற்கு அரசு உத்தரவிட வேண்டும் என அவா்கள் வலியுறுத்தி உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT