முகப்பு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த அருணபதி கிராமத்தில் நடைபெற்ற ஆணவ படுகொலையை கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த அருணபதி கிராமத்தில் நடைபெற்ற ஆணவ படுகொலையை கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் ஊத்தங்கரை ரவுண்டானாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு வட்டச் செயலாளா் மகாலிங்கம் தலைமை வகித்தாா். சிங்காரப்பேட்டை பகுதி செயலாளா் சபாபதி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் கோவிந்தசாமி, அஞ்சலாமேரி, எத்திராஜ் உள்பட பலா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா்.

ஆணவப் படுகொலையில் பாதிக்கப்பட்ட பெண் அனுசூயாவிற்கு அரசு வேலை வழங்க வேண்டும்; ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்; ஆணவப் படுகொலைகளைத் தடுத்திடும் வகையில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என அவா்கள் கோஷமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.