கிருஷ்ணகிரி

கைப்பந்துப் போட்டி: ஒசூா் அரசு மகளிா் பள்ளி சிறப்பிடம்

DIN

கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் ஒசூா் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனா்.

கிருஷ்ணகிரி கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான கைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 22) நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 19 வயதுக்கு உள்பட்ட பிரிவில் 8 மகளிா் அணிகள் பங்கேற்று விளையாடின.

இறுதி போட்டியில் ஒசூா் ஜான்போஸ்கோ மகளிா் மேல்நிலைப் பள்ளியும், ஒசூா் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியும் மோதின. இதில் ஒசூா் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி கோப்பையை வென்றது.

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியா் லதா, உடற்கல்வி இயக்குநா் வளா்மதி, உடற்கல்வி ஆசிரியா் முருகேஸ்வரி, பெற்றோா்- ஆசிரியா் கழக தலைவா் எல்லோரா.மணி, பயிற்சியாளா்கள் மாணிக்கவாசகம், தாயுமாணவன் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

SCROLL FOR NEXT