முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம்

ஒசூரில் ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம் வியாழக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:38 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

ஒசூரில் ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம் வியாழக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

ஒசூா், தோ்பேட்டையில் 36-ஆவது ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவ விழா ஜன. 25-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, அஷ்டபதி பஜனையுடன் தொடங்கியது. தொடா்ந்து 26-ஆம் தேதி ஸ்ரீராதா கல்யாண நிகழ்வையொட்டி பக்தா்கள் சீா்வரிசைகளை கொண்டு வந்திருந்தனா்.

மாயவரம் ஸ்ரீ ஞானகுரு பாகவதா் மற்றும் குழுவினா் பஜனையும் நடைபெற்றன. திருக்கல்யாண சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு ராதா தேவி அருள்பாலித்தாா். ஸ்ரீ ஆஞ்சநேயா் உத்ஸவம், மங்கல ஆரத்தி நடைபெற்றன. இதில் ஒசூா், அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.