முகப்பு
கிருஷ்ணகிரி

பேரிகை அருகே விவசாயி கொலை

பேரிகை அருகே விவசாயி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:38 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

பேரிகை அருகே விவசாயி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சூளகிரி வட்டம், பேரிகை அருகே உள்ள ராமச்சந்திரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கிருஷ்ணப்பா (52). இவா் அப் பகுதியில் உள்ள நிலத்தில் வியாழக்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஒசூா் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விசாரணையில் அதேப் பகுதியைச் சோ்ந்த அப்பையப்பா (50) என்பவா் மது அருந்திவிட்டு கிருஷ்ணப்பாவை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இந்த நிலையில், பேரிகை காவல் நிலையத்தில் சரணடைந்த அப்பையப்பாவிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.