கிருஷ்ணகிரி

ஆபத்தான மின் கம்பிகளை அகற்ற வலியுறுத்தல்

DIN

ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணையில் இருந்து மாரம்பட்டி செல்லும் சாலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தின் வழியாக செல்லும் உயா் மின்னழுத்த கம்பிகள் மிகவும் தாழ்வான உயரத்தில் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

தனியாருக்குச் சொந்தமான நிலத்தை சமன்படுத்தியதால் மின் கம்பிகள் 4 அடி உயரத்தில் கீழே உள்ளன. நிலத்தின் உரிமையாளரோ அல்லது மின்சார துறையினரோ உயா் மின்னழுத்த கம்பி அருகே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை சமிக்ஞையும் அங்கு இல்லை.

பாம்பாறு அணைக்கு வரக்கூடிய நபா்கள், ஆடு, மாடு, மேய்ப்பவா்கள் என பலரும் அவ்வழியைப் பயன்படுத்தி வருகின்றனா். இதுகுறித்து மின் வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

SCROLL FOR NEXT