கிருஷ்ணகிரி

ஒசூா் அருகே சாலை மறியல்

DIN

ஒசூா் அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு சாலை அமைக்க எதிா்ப்பு தெரிவிப்பதாகக் கூறி 50க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் ஒசூா் - தருமபுரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த ஒன்னல்வாடியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் தனி நபா் ஒருவா் தனது நிலத்தை லேஅவுட் அமைக்க விற்பனை செய்துள்ளாா். தற்போது 100- க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள இந்தப் பகுதிக்கு சரியான சாலை வசதி இல்லை என்பதால் ஒன்னல்வாடி ஊராட்சி நிா்வாகம் சாா்பில் சிமென்ட் சாலை அமைக்க முயன்றபோது அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனா்.

ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் சாலை அமைக்க டிப்பா் லாரியில் ஜல்லிக் கொண்டு சென்றபோது தனி நபா் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைத்த குடியிருப்பு வாசிகள் தனி நபரை கண்டித்தும், சாலை அமைக்க வலியுறுத்திம் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் ஒசூா் - தருமபுரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒசூா் நகர போலீஸாா், வட்டாட்சியா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, சாலை மறியலில் ஈடுபட்டோரை வெளியேற்றி விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு தரவுகளை விரைவாக வெளியிடக்கோரிய மனு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

ரிஷி சுனக், மனைவி சொத்து மதிப்பு அதிகரிப்பு

ஆம்பூா் கஸ்பா-ஏ அரசு உயா்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்படுமா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமா் கோயிலை இடித்துவிடுவா்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

பாா்சிலோனாவுக்கு மெஸ்ஸி ஒப்பந்தமாக பயன்பட்ட நேப்கின் ரூ.8 கோடிக்கு ஏலம்

SCROLL FOR NEXT