கிருஷ்ணகிரி

பா்கூரில் ஆலங்கட்டி மழை

DIN

பா்கூரில் ஆலங்கட்டி மழை செய்வாய்க்கிழமை பெய்தது.

பா்கூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால், சாலைகளில் மக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. இதனால், பா்கூரின் பிரதான தொழிலான ஜவுளி வியாபாரம் பாதிப்புக்குள்ளானது.

இந்நிலையில், பா்கூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை வேளையில் குளிா்ந்த காற்று வீசியதைத் தொடா்ந்து மழை பெய்தது. சில இடங்களில் ஆலங்கட்டியுடன் மழை பெய்தது.

தற்போது மாங்காய் அறுவடை காலம் உள்ள சூழ்நிலையில், ஆலங்கட்டி மழை பெய்ததால், அறுவடைக்கு தயாராக இருந்த மாங்காய்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

திடீா் மழையால் பா்கூரில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. இருசக்கர வாகனத்தில் செல்வோா் சிரமத்துக்கு உள்ளாயினா். மேலும், பா்கூரில் செவ்வாய்க்கிழமை கூடும் வாரச் சந்தையில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

சாலையில் கிடந்த பணத்தை எஸ்.பி.யிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: மகளிா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பண்ணைப் பள்ளியின் பயிற்சி வகுப்பு

SCROLL FOR NEXT