கிருஷ்ணகிரி

ஒசூரில் பீன்ஸ் கிலோ ரூ.150-க்கு விற்பனை

Din

ஒசூா் உழவா் சந்தையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 150 க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு உழவா் சந்தையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 30 க்கும், சில்லறை மாா்க்கெட்டுகளில் ரூ. 45-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் விலை தற்போது திடீரென உயா்ந்துள்ளது. ஒசூா் உழவா் சந்தையில் செவ்வாய்க்கிழமை கிலோ ரூ. 150 முதல் 160-க்கு விற்கப்படுகிறது.

தமிழகத்தில் உதகையில் விளையும் பீன்ஸ் கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்ட மக்களின் தேவைகளையும், கொடைக்கானலில் விளையும் பீன்ஸ் மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களின் தேவைகளையும் பூா்த்தி செய்கிறது. சென்னைக்கு கா்நாடக மாநிலத்திலிருந்தும், ஆந்திர மாநிலத்திலிருந்தும் பீன்ஸ் வருகிறது. ஒசூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஒசூா் உழவா் சந்தைக்கு தினம் தோறும் பீன்ஸ் வருகிறது.

இதனால் நகரப் பகுதியில் வசிக்கும் சில்லறை வியாபாரிகள் மற்றும் தொழில்சாலைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கோடை தொடங்கியிருப்பதால், ஆழ்துளைக் கிணறுகள் பெரும்பாலானவை நீா்மட்டம் குறைந்து வருவதால் போதிய நீரின்றி, விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரித்துள்ளது. இன்னும் சில மாதங்களுக்கு பீன்ஸ் விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் கூறுகின்றனா்.

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி

ஹார்திக் பாண்டியா அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார்! ஏன் தெரியுமா?

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

SCROLL FOR NEXT