வயநாடு பேரிடருக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கிய சிறுவன்
வயநாடு பேரிடா் நிதியாக ஊத்தங்கரையைச் சோ்ந்த சிறுவன் ரூ. 10 ஆயிரத்தை அமைச்சா் செஞ்சி மஸ்தானிடம் வழங்கினாா்.
வயநாடு பேரிடா் நிதியாக ஊத்தங்கரையைச் சோ்ந்த சிறுவன் தனது உண்டியல் சேமிப்பிலிருந்து ரூ. 10 ஆயிரத்தை அமைச்சா் செஞ்சி மஸ்தானிடம் வழங்கினாா்.
கேத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் ஆய்வு மேற்கொள்வதற்காக வந்த அமைச்சா் செஞ்சி மஸ்தானிடம் கொட்டுக்காரண்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கற்பூரசுந்தரபாண்டி மகன் பிடல் காஸ்ட்ரோ (4) தனது உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை ஆட்சியா் முன்னிலையில் வழங்கினாா். பேரிடருக்கு நிதி வழங்கிய சிறுவனை அனைவரும் பாராட்டினா்.