முகப்பு
கிருஷ்ணகிரி

கிரானைட் கற்கள் கடத்த முயற்சி: லாரி பறிமுதல்

Updated On : 18 பிப்ரவரி 2024, 12:00 am IST
பகிர்:

வேப்பனப்பள்ளி அருகே கிரானைட் கற்களை கடத்துவதற்காக பயன்படுத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கிருஷ்ணகிரி சிறப்பு துணை வட்டாட்சியா் கோகுலகண்ணன் தலைமையிலான குழுவினா் பூதிமுட்லு பகுதியில் கண்காணிப்புப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, வேப்பனப்பள்ளி - தீா்த்தம் சாலையில் கேட்பாரற்று நின்றிருந்த லாரியை சோதனை செய்தனா். அதில் மிகப் பெரிய 5 கிரானைட் கற்கள் இருந்தது தெரிய வந்தது. வேப்பனப்பள்ளி போலீஸாா் கிரானைட் கற்களுடன் லாரியை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.