முகப்பு
கிருஷ்ணகிரி

கீழ்குப்பம் கருமாரியம்மன் கோயில் குடமுழுக்கு

Updated On : 12 ஜூன், 2024 at 9:33 PM
பகிர்:

ஊத்தங்கரை, ஜூன் 12: ஊத்தங்கரையை அடுத்த கீழ்குப்பம் கருமாரியம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் கும்பாபிஷேகம் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், சுதா்சன ஹோமம், நவசக்தி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை நடை பெற்ற பிறகு பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. புதன்கிழமை அதிகாலை மங்கள இசையுடன் கோயில் கலசங்களில் புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கீழ்குப்பம் கிராம மக்கள் செய்திருந்தனா்.