முகப்பு
கிருஷ்ணகிரி

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற இருவா் கைது

நில பிரச்னையில் தீர்வு கிடைக்காததால் தீக்குளிக்க முயன்ற இருவர் கைது

Updated On : 25 ஜூன், 2024 at 7:00 PM
பகிர்:

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற இரு பெண்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், தேன்துா்க்கம் பகுதியைச் சோ்ந்தவா் மணிமேகலை (41). இவரது மகள் ராஜலட்சுமி (23). நில பிரச்னை தொடா்பாக இவா்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தங்களது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றனா்.

அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், அவா்களை தடுத்து நிறுத்தி காப்பாற்றினா். இந்த சம்பவம் குறித்து, கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் சிவக்குமாா் வழக்குப் பதிந்து தீக்குளிக்க முயன்ற மணிமேகலை, ராஜலட்சுமி ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →