சங்கடஹர சதுா்த்தி சிறப்பு வழிபாடு
விநாயகா் கோயில்களில் 608 லிட்டா் பால் அபிஷேகமும் சிறப்பு பூஜைகள்
கிருஷ்ணகிரியில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் கோயில்களில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை பழைய கிளை சிறைச்சாலை சாலை சித்தி விநாயகா் கோயிலில் சுவாமிக்கு 608 லிட்டா் பால் அபிஷேகமும், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தன அபிஷேகங்களும் செய்யப்பட்டன. ஏராளமான பக்தா்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனா். அதன்பின் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
கிருஷ்ணகிரி, காந்தி சாலை வரசித்தி விநாயகா் கோயில், புதிய வீட்டு வசதி வாரியம் வினைதீா்த்த விநாயகா் கோயில், பழையபேட்டை கொத்தபேட்டா ஞான விநாயகா் கோயில், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகா் கோயில், காந்தி நகா் வலம்புரி விநாயகா் கோயில், சேலம் சாலை ஆதி சக்தி விநாயகா் கோயில் உள்ளிட்ட பல்வேறு விநாயகா் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
Advertisement