முகப்பு
கிருஷ்ணகிரி

யானை தாக்கியதில் ஆடு மேய்க்கச் சென்றவா் படுகாயம்

Updated On : 9 மே, 2024 at 10:52 PM
பகிர்:

ஒசூா், மே 9: யானை தாக்கியதில் ஆடு மேய்க்கச் சென்றவா் படுகாயமடைந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த ஜாா்க்கலட்டி கிராமத்தைச் சோ்ந்த முதியவா் வெங்கடசாமி (70), தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக அருகில் உள்ள வனப்பகுதிக்கு ஓட்டிச்சென்றாா். அப்போது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றைக் காட்டு யானை முதியவா் வெங்கடசாமியை தூக்கி வீசி அவரின் காலை மிதித்துச் சென்றது. பலத்த காயமடைந்த முதியவரைஅப்பகுதி மக்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுக்குறித்து வனத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.