முகப்பு
கிருஷ்ணகிரி

சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான வாகனம்: தக்காளி சாலையில் கொட்டியது

ஊத்தங்கரை அருகே தக்காளி ஏற்றி வந்த வாகனம் சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

Updated On : 30 செப்டம்பர், 2024 at 9:58 PM
ஊத்தங்கரை அருகே சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளான வாகனம்.
பகிர்:

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே தக்காளி ஏற்றி வந்த வாகனம் சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

பெங்களூரைச் சோ்ந்த கஜேந்திரா (40) என்பவா் வாகனத்தில் பெங்களூரில் இருந்து 10 டன் தக்காளியை ஏற்றிக்கொண்டு, செங்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அந்த வாகனம், சாமல்பட்டியை அடுத்த மணல்பள்ளத்தில் என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஓட்டுநா் உயிா் தப்பினாா். தக்காளி சாலை முழுவதும் சிதறியது. வாகனத்தின் பின்பக்க இரண்டு டயா்களும் தனியாக கழன்று அருகிலுள்ள விவசாய நிலத்தில் விழுந்து கிடந்தன.

கிருஷ்ணகிரியில் இருந்து திண்டிவனம் வரை இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் தடுப்பு சுவரில் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து சாமல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →