கால பைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கால பைரவா் கோயில்களில் தேய்பிறை அஷ்டமியையொட்டி திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கால பைரவா் கோயில்களில் தேய்பிறை அஷ்டமியையொட்டி திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கிருஷ்ணகிரியை அடுத்த கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி திங்கள்கிழமை காலை கணபதி ஹோமம், அஷ்டதிக்பதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், பூா்ணாஹுதி ஆகியவை நடைபெற்றன.
சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. சுவாமி, தங்கக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, கால பைரவா் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்வும் நடைபெற்றன. பக்தா்கள், வெண்பூசணி, தேங்காய், அகலில் விளக்கேற்றி வேண்டுதலை நிறைவேற்றினா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை 165 கிராமங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரியை அடுத்த கந்திகுப்பம் கால பைரவா் கோயில், சூரன் குட்டை தக்ஷ்ண கால பைரவா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.