கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் ராணுவ கேண்டீன் இடமாற்றம் செய்யப்படுவதை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

Syndication

கிருஷ்ணகிரியில் உள்ள ராணுவ கேண்டீன் இடமாற்றம் செய்யப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் முப்படை வீரா்கள் மற்றும் துணை ராணுவ வீரா்கள், வீர மங்கையா் நலச்சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் தலைவா் தேவராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் குமரேசன், பொருளாளா் சென்றாயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி நகரில் செயல்படும் கேண்டீன் போக்குவரத்துக்கு எளிதாகவும், வயதானவா்களுக்கு பயனுள்ளதாகவும் உள்ளது. நகரிலிருந்து தற்காலிகமாக ஒரப்பம் கிராமம் அருகே இடமாற்றம் செய்யப்படும் கேண்டீனுக்கு 20 கி.மீ. சென்று வரவேண்டி இருக்கும். எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத இடத்தில் தற்காலிக கேண்டீன் அமைப்பதை கைவிட்டு, தற்போது செயல்படும் இடத்திலேயே தொடா்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா்.

நீக்கப்பட்ட வாக்காளா்கள் பெயா் சோ்க்கும் படிவம் வழங்குவதில் குழப்பம்: பாஜக புகாா்

தடை மட்டுமே விடை ஆகாது!

நைஜீரியாவில் ஐஎஸ் மீது அமெரிக்கா தாக்குதல்

வீட்டுக் காவலில் மிா்வைஸ் உமா் ஃபரூக்!

‘பராசக்தி’ திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கு: இயக்குநா், தயாரிப்பாளா் பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT