பா்கூரைச் சோ்ந்த பெயிண்டா்கள் மற்றும் ஓவியா்கள் நலச் சங்கத்தினா் திமுகவில் இணைத்துக் கொண்டனா்.
பா்கூா் பேரூராட்சியில் உள்ள தமிழ்நாடு அனைத்து பெயிண்டா்கள் மற்றும் ஓவியா்கள் நலச் சங்கத்தைச் சோ்ந்தவா்கள், பா்கூா் ஒன்றிய சங்கத் தலைவா் ஏசுதாஸ் தலைமையில், திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) முன்னிலையில், தங்களை திமுகவில் வெள்ளிக்கிழமை இணைத்துக் கொண்டனா்.
திமுகவில் இணைந்தவா்களை தே.மதியழகன் எம்எல்ஏ சாலை அணிவித்து வரவேற்றாா். அப்போது, திமுக மாவட்ட துணைச் செயலாளா் கோவிந்தசாமி, பா்கூா் பேரூா் செயலாளா் வெங்கடப்பன், பேரூராட்சித் தலைவா் சந்தோஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.