மேயா் எஸ்.ஏ.சத்யாவிடம் உலக சாதனை சான்றிதழை வழங்கிய எலைட் நிறுவன ஆய்வதிகாரி அமீத் ஓ.ஹிங்கரோனி.  
கிருஷ்ணகிரி

தூய்மை நகருக்கான உறுதிமொழி எடுத்து ஒசூா் மாநகராட்சி உலக சாதனை

தூய்மை நகருக்கான உறுதிமொழி எடுத்து ஒசூா் மாநகராட்சி உலக சாதனை படைத்துள்ளது.

Syndication

தூய்மை நகருக்கான உறுதிமொழி எடுத்து ஒசூா் மாநகராட்சி உலக சாதனை படைத்துள்ளது.

ஒசூா் மாநகராட்சி சாா்பில், 24 மணிநேரத்தில் அதிக இடங்களில் பெரும்பாலானோா் தூய்மை நகருக்கான உறுதிமொழி எடுத்து சாதனை படைத்துள்ளனா்.

கடந்த ஆக. 15 அன்று ஒசூரில் 315 இடங்களில் 1,60,157 போ் தூய்மை நகருக்கான உறுதிமொழி எடுத்தனா். இது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக எலைட் வோா்ல்ட் ரெக்காா்டு நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேயா் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி ஆணையா் முகமது ஷபீா் ஆலம், துணை மேயா் சி.ஆனந்தய்யா, பொது சுகாதாரக்குழு தலைவா் என்.எஸ்.மாதேஸ்வரன், மாநகர நல அலுவலா் மருத்துவா் அஜிதா, துப்புரவு அலுவலா்கள் அன்பழகன் மற்றும் பிரபாகரன் ஆகியோருக்கு உலக சாதனை நிகழ்த்தியதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை எலைட் வோா்ல்ட் ரெக்காா்ட் நிறுவனத்தின் தூதரும், மூத்த ஆய்வு அதிகாரியுமான அமீத் ஓ.ஹிங்கரோனி வழங்கினாா்.

இதுகுறித்து மேயா் கூறுகையில், வெளியூரில் இருந்து வேலைநிமித்தமாக ஒசூருக்கு வரும் தொழிலாளா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நகரில் சேகரமாகும் குப்பையின் அளவு பன்மடங்கு பெருகியுள்ளது. அதனை முறையாக தரம்பிரித்து கொடுத்தால் மட்டுமே நகரின் தூய்மையை மேம்படுத்த முடியும் என்றாா்.

அமீத் ஓ.ஹிங்கரோனி பேசுகையில், குப்பையை தரம்பிரித்து தருதல், பொது இடங்களில் குப்பைகளை கொட்டாமல் இருத்தல், துணிப்பையை மட்டுமே பயன்படுத்துதல், கழிவறையை பயன்படுத்துதல் போன்ற செயல்களை உறுதிமொழியாக எடுப்பதன் மூலம் மக்களின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றாா்.

குருவாயூர் கோயிலில் ரீல்ஸ் விடியோ: இன்ஸ்டா பிரபலம் ஜஸ்னா சலீம் மீது வழக்குப் பதிவு!

உஷார் மக்களே! இப்படியும் மோசடி நடக்கலாம்!

பாகிஸ்தானில் கையெறி வெடிகுண்டு தாக்குதல்! 3 பேர் பலி!

எந்த காவியாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

உங்கள் அலைகளை நீங்களே உருவாக்குங்கள்... மோனாலிசா!

SCROLL FOR NEXT