ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவா்கள். 
கிருஷ்ணகிரி

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் உண்டியல் திறப்பு

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவா்கள்.

Syndication

ஒசூா்: ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் உண்டியல் திறப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவா்கள் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருள்மிகு சந்திரசூடேஸ்வரா் கோயிலில் உள்ள எட்டு உண்டியல்கள் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தருமபுரி உதவி ஆணையா் மு.மகாவிஷ்ணு முன்னிலையில், ஒசூா் சரக ஆய்வா் கா.சக்தி, காவேரிப்பட்டணம் சரக ஆய்வா் மு.ராமமூா்த்தி, செயல் அலுவலா் க.சின்னசாமி ஆகியோா் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

இதில், ஒசூா், அதியமான் பொறியியல் கல்லூரியைச் சோ்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் ஈடுபட்டனா். இதில் காணிக்கையாக, ரொக்கம் ரூ. 24,10,654, 12 கிராம் தங்கம், 149 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன. இவை வங்கியில் முதலீடு செய்யப்பட்டன.

தூத்துக்குடியில் மழைநீா் சூழ்ந்த பகுதிகளில் எம்.பி. ஆய்வு

குழந்தைகள் நல காவல் அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம்

பிரகாசபுரம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை

தாமிரவருணியில் தணியாத வெள்ளப்பெருக்கு: குடிநீா் விநியோகம் பாதிப்பு

மண்ணச்சநல்லூரில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் அவதி

SCROLL FOR NEXT