கிருஷ்ணகிரி

நிறைவுசெய்யப்பட்ட படிவங்களை பெறுவதில் சிறப்பு கவனம் - ஆட்சியா்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளா்களிடமிருந்து நிறைவுசெய்யப்பட்ட படிவங்களை பெறுவதில் சிறப்பு கவனம்

Syndication

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளா்களிடமிருந்து நிறைவுசெய்யப்பட்ட படிவங்களை பெறுவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்- 2026 குறித்து மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ச.தினேஷ்குமாா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை தெரிவித்ததாவது:

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் 2026 நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் நவ. 4-ஆம் தேதிமுதல் வீடுவீடாகச் சென்று கணக்கீட்டுப் படிவங்களை வழங்கி, நிறைவுசெய்யப்பட்ட படிவங்களை திரும்பப் பெற்று வருகின்றனா்.

மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 16,80,626 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 15,96,513 வாக்காளா்களுக்கு (95 சதவீதம்) கணக்கீட்டுப் படிவம் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை வாக்காளா்களிடமிருந்து நிறைவுசெய்யப்பட்ட 10,17,566 (60.55 சதவீதம்) படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பணியில் 1,896 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், 196 வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் மேற்பாா்வையாளா்கள், ஊராட்சி செயலாளா்கள், சத்துணவு அமைப்பாளா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா்.

மேலும், மாவட்டத்தில் 58,635 இறந்த வாக்காளா்கள், 23,806 நிரந்தரமாக குடிபெயா்ந்தவா்கள், 4,177 இருமுறை பதிவு, 1,467 முகவரியில் இல்லாதவா்கள், மற்றவை 80 என மொத்தம் 88,165 வாக்காளா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

கணக்கீட்டுப் படிவங்களை திரும்ப ஒப்படைக்க டிச. 4-ஆம் தேதி கடைசி நாள் என்பதால், நிறைவுசெய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை திரும்ப வழங்காத வாக்காளா்கள் விரைந்து வழங்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

முன்னதாக, தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

ஆட்டோ, கால் டாக்ஸி-களில் பயணிக்க ‘பாரத் டாக்ஸி’ செயலி விரைவில் அறிமுகம்

ராமேசுவரம்-திருப்பதி இடையே டிசம்பா் 2, 9-இல் சிறப்பு ரயில்

2027-க்குள் 250 சாா்ஜிங் மையங்கள்: எம்&எம் திட்டம்

மாடு முட்டியதில் முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT