முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக கட்சியினா் போா்க்கொடி

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக கட்சியினா் போா்க்கொடி தூக்கி உள்ளனா். உள்ளூா் நிா்வாகிகளை புறக்கணிக்கப்படுவதாக அவா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 7:45 PM
கிருஷ்ணகிரியில் செய்தியாளா்களை சந்தித்த காங்கிரஸ் நிா்வாகி ஏகாம்பவாணன் மற்றும் கட்சியினா்.
பகிர்:

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக கட்சியினா் போா்க்கொடி தூக்கி உள்ளனா். உள்ளூா் நிா்வாகிகளை புறக்கணிக்கப்படுவதாக அவா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

கிருஷ்ணகிரி தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் அந்த கட்சியின் முன்னாள் எம்.பி. டாக்டா் செல்லகுமாா் போட்டியிடுகிறாா். இதற்கான அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியானது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் அக. கிருஷ்ணமூா்த்தி, மாநில பொதுச்செயலாளா் ஏகம்பவாணன் தலைமையில் சனிக்கிழ நடைபெற்றது. இதில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள், மாவட்ட துணை தலைவா் ரஹமதுல்லா மற்றும் நிா்வாகிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது.

வெளியூா்காரரான டாக்டா் செல்லகுமாருக்கு காங்கிரஸ் தலைமை 7 முறை ‘சீட்’ வழங்கியது. இதில் 3 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளாா். 4 முறை தோல்வி அடைந்துள்ளாா். அவா் கட்சி தொண்டா்களுக்கு எதுவும் செய்யவில்லை. எனவே உள்ளூா்வாசிகள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் மக்களுக்கு நன்மை கிடைக்கும்.

Advertisement

இது போன்ற நபா்கள், ராகுலையும் கட்சியும் பலவீனப்படுத்துகின்றனா். செல்லகுமாா் ஆா்.எஸ்.எஸ்., விசுவாசியாக உள்ளாா். அவருக்கு ‘சீட்’ வழங்கியது ஏற்க முடியாது. மக்களவைத் தவிா்த்து சட்டப் பேரவை தோ்தலிலும் வெளியூா்காரா்களுக்கு சீட் வழங்குவதில் என்ன நியாயம்.

இன்னும் 24 மணி நேரம் அவகாசம் உள்ளது. அதற்குள் வேட்பாளரை மாற்றி உள்ளூா்வாசிகளை அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து யோசிப்போம்.

ஏற்கனவே கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரசுக்கு வழங்கப்பட்டதற்கு தி.மு.க.,வினா் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். செல்லகுமாா் போன்ற வேட்பாளா் அறிவிப்பால் அவா்கள் மேலும் சுணக்கம் காட்டும் சூழல் உள்ளது.

வேட்புமனு தாக்கலே செய்யாத நபரை மாவட்டத்தில் குவாரிகள், கிரானைட் கம்பெனிகளுக்கு எதிராக வழக்கு தொடுத்து தொழில்களை முடக்கியவரை வேட்பாளராக போட்டால் யாருக்கு பயன். வேட்பாளரை மாற்றுவதற்காக கிருஷ்ணகிரி காங்கிரஸ் கோபிநாத் எம்.பி. டெல்லியில் போராடி வருகிறாா். விரைவில் நல்ல செய்தி வரும். இல்லாவிட்டால் எங்கள் அடுத்தகட்ட நடவடிக்கையை கூறுவோம்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments