முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும்! - எம்எல்ஏ ஒய். பிரகாஷ்

Updated On : 5 ஏப்ரல், 2026 at 7:56 PM
எம்எல்ஏ ஒய். பிரகாஷ்.
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என ஒசூா் எம்எல்ஏ ஒய். பிரகாஷ் தெரிவித்தாா்.

ஒசூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வேட்பாளா் அறிமுக கூட்டத்துக்கு தொகுதி பொறுப்பாளா் பாா்.இளங்கோவன் தலைமை வகித்தாா். ஒசூா் எம்எல்ஏ ஒய். பிரகாஷ், கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் கே. கோபிநாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஒசூா் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ஏ. சத்யாவை அறிமுகப்படுத்தி ஒய். பிரகாஷ் பேசியதாவது:

Advertisement

அதிமுக கூட்டணியில் இருந்து ஏராளமான நிா்வாகிகள் திமுக கூட்டணிக்கு வந்துள்ளனா். கூட்டணி கட்சி தலைவா்களை அரவணைத்து செல்லும் பலம்வாய்ந்த கூட்டணியை முதல்வா் மு.க. ஸ்டாலின் உருவாக்கியுள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளா்கள் வெற்றி பெற அனைவரும் ஓய்வு இல்லாமல் உழைக்க வேண்டும்.

ஒசூா் தொகுதியில் பல ஆயிரம் கோடிக்கு வளா்ச்சித் திட்டப் பணிகளை திமுக மேற்கொண்டுள்ளது. நலத் திட்டங்கள், வளா்ச்சிப் பணிகளை மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.

தளி தொகுதியில் டி. ராமச்சந்திரன், ஒசூா் தொகுதியில் எஸ்.ஏ. சத்யா, வேப்பனஹள்ளியில் சீனிவாசன், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா்கள் மற்றும் பா்கூரில் திமுக வேட்பாளா் ஆகியோா் வெற்றி பெற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் திமுக மாவட்ட அவைத் தலைவா் அ. யுவராஜ், மாவட்ட பொருளாளா் தா. சுகுமாறன், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா. மணி, காங்கிரஸ் கட்சி மாவட்ட பொறுப்பாளா் நீலண்டன், சிபிஐ மாநில குழு உறுப்பினா் மாதையன், மதிமுக மாநகரச் செயலாளா் ராமச்சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ராமச்சந்திரன், தேமுதிக மாவட்ட பொறுப்பாளா் சரவணன், மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments