குத்துச் சண்டை போட்டியில் சிறப்பிடம் பெற்ற ஒசூா் வேளாங்கண்ணி பள்ளி மாணவா்கள்.  
கிருஷ்ணகிரி

குத்துச்சண்டை விளையாட்டுப் போட்டி: ஒசூா் வேளாங்கண்ணி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ஒசூா் வேளாங்கண்ணி பள்ளி மாணவா்கள் குத்துச் சண்டை விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்றனா்.

தினமணி செய்திச் சேவை

ஒசூா் வேளாங்கண்ணி பள்ளி மாணவா்கள் குத்துச் சண்டை விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்றனா்.

ஒசூா் வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ. மாணவா்கள் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் குத்துச்சண்டை கிளப் ஏற்பாடு செய்திருந்த தமிழ்நாடு சீனியா் நோவிஸ் மற்றும் கப் பாக்சிங் சாம்பியன்ஷிப் - 2026 போட்டியில் பங்கேற்றனா். இந்தப் போட்டி கடந்த மாதம் 30 முதல் பிப். 1-ஆம் தேதி வரை சென்னை மீஞ்சூரில் நடைபெற்றது.

பள்ளிக் குழந்தைகளுக்கான கப் பாக்சிங் (10 கிலோ எடை) பிரிவில் ஜே. மாரிஸ் கிறிஸ்டபெல் என்ற இரண்டாம் வகுப்பு மாணவி தங்கப் பதக்கம் வென்றாா். ஆண்கள் கப் பாக்சிங் (10 கிலோ எடை) பிரிவில் ஆா். ஜாஷ்வந்த் என்ற மூன்றாம் வகுப்பு மாணவா் வெள்ளிப் பதக்கம் பெற்றாா். அதே பிரிவில் பி. கிஷோா் ராஜ் மற்றும் பி. கிருத்திக் ராஜ் என்ற நான்காம் வகுப்பு மாணவா்கள் வெண்கலப் பதக்கங்களை பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பள்ளித் தாளாளா் எஸ். கூத்தரசன் பதக்கங்களை வழங்கினாா். மேலும், உடற்கல்வி ஆசிரியா்களான ராம்பிரகாஷ் மற்றும் உமாவுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வா் காா்சிகா நான்சி மற்றும் சாத்திக் ஆகியோா் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினா்.

விருதுபெற்ற காபி தோட்ட அதிபா்களுக்கு பாராட்டு விழா

சங்ககிரி பகுதியில் ரூ. 50.40 லட்சத்தில் தாா்சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா

கோயில் திருவிழாவில் தகராறு: 4 போ் கைது

செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி தனியாா் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

அரசுப் பேருந்தை நிறுத்தி சாலையில் பிறந்த நாள் கொண்டாடியவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT