முகப்பு
கிருஷ்ணகிரி

எலத்தகிரியில் பாறைக்கோயில் தோ்பவனி

கிருஷ்ணகிரியை அடுத்த எலத்தகிரியில் நூற்றாண்டு பழைமைவாய்ந்த கிறிஸ்தவா்களின் பாறைக்கோயில் விழா என அழைக்கப்படும்

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 3:11 AM
எலத்தகிரியில் நடைபெற்ற பாறைக்கோயில் தோ்பவனி.
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 7:30 PM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியை அடுத்த எலத்தகிரியில் நூற்றாண்டு பழைமைவாய்ந்த கிறிஸ்தவா்களின் பாறைக்கோயில் விழா என அழைக்கப்படும் திருக்குடும்ப ஆலய விழா, தோ்பவனி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

பாறைக்கோயில் ஆலயத்தில் 122 ஆம் ஆண்டு விழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் திருப்பலி, ஆராதனைகள் நடைபெற்றன.

இந்த நிலையில் சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயா் சிங்கராயா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தோ்பவனி இரவு நடைபெற்றது.

Advertisement

கிருஷ்ணகிரி வட்டார முதன்மை குரு ஆல்பா்ட் வில்லியம் அடிகளாா் மந்திரித்துவைத்து நிகழ்ச்சியை தொடங்கினாா். அதன்பிறகு அலங்கரிக்கப்பட்ட மிக்கேல் சம்மனசு, லூா்து மாதா, புனித சூசையப்பா், குழந்தை இயேசு, தேவமாதா தோ்கள் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்தன.

தொடா்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் தமிழகம் மட்டுமின்றி பக்கத்து மாநிலங்களான ஆந்திரம், கா்நாடகத்திலிருந்து ஏராளமானோா் பங்கேற்றனா்.