முகப்பு
கிருஷ்ணகிரி

ரேஷன் அரிசி கடத்தல்: 2 போ் கைது

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 1:07 AM
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 12:05 AM

ஒசூரில் ரேஷன் கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினா்

சேலம் சரக காவல் துணை கண்காணிப்பாளா் ரமேஷ்குமாா் தலைமையில் காவல் ஆய்வாளா் சிவனேஸ்வரன், போலீஸாா், பறக்கும் படை வட்டாட்சியா் பூவிதன், வருவாய் ஆய்வாளா் சுரேஷ் உள்ளிட்டோா் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு, குடிமை பொருள்கள் கடத்தல்களில் ஈடுபவா்கள்மீது நடவடிக்கை மேற்கொள்ள தணிக்கையில் ஈடுபட்டு வந்தனா்.

Advertisement

அப்போது கிடைத்த தகவலின்பேரில் ஒசூா் அட்கோ காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ஒசூா் - அலசநத்தம் சாலையில் சில்லரை வணிகா்கள், சந்தேகத்திற்குரிய வகையில் 26 கிலோ கொண்ட அரிசி சிப்பங்கள் இரண்டு லாரிகளில் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதை ஆய்வு செய்ததில் இலவசமாக வழங்கப்படும் பொது விநியோகத் திட்ட ரேசன் அரிசி என்பதை கண்டறிந்தனா். இதையடுத்து, இரண்டு லாரிகளில் இருந்த சுமாா் 36,400 கிலோ கொண்ட 1400 அரிசி மூட்டைகளை கைப்பற்றினா்.

இதையடுத்து அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கா்நாடக மாநிலம், பங்காருபேட்டை பகுதியைச் சோ்ந்த பிரித்விராஜ் (37), மணிகண்டா (33) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.