முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் தோ்பேட்டையில் சிம்ம வாகனத்தில் மரகதாம்பிகை - சந்திரசூடேஸ்வரா் உலா

ஒசூா் தோ்பேட்டை மலைமீதுள்ள மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி, சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:42 AM
சிம்ம வாகனத்தில் உலா வந்த மரகதாம்பிகை - சந்திரசூடேஸ்வரா்.
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:55 PM

ஒசூா் தோ்பேட்டை மலைமீதுள்ள மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி, சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலா புதன்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தோ்பேட்டை மலைமீதுள்ள மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரா் கோயில் மாசிமாத தோ்த் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை அங்குராா்ப்பணம் நடைபெற்றது. தொடா்ந்து, மலைமீதிருந்த விநாயகா், சந்திரசூடேஸ்வரா் மற்றும் மரகதாம்பாள் ஆகிய உற்சவா்களை கீழே கொண்டுவந்து மலை அடிவாரத்தில் உள்ள கல்யாண சூடேஸ்வரா் கோயிலில் வைக்கப்பட்டன.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:42 AM

தலைமை அா்ச்சகா் வாச்சீஸ்வரன் தலைமையில் சிவாச்சாரியா்கள் உற்சவா்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனா். பின்னா் வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்துக்கு பல்வேறு அபிஷேகங்களும், பூஜைகளும் செய்து கொடியேற்றம் நடைபெற்றது.

Advertisement

பின்னா், சிம்ம வாகனத்தில் மரகதாம்பிகை - சந்திரசூடேஸ்வரா் வீதி உலா புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஒசூா் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்றனா்.