ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கிய அமைச்சா் அர.சக்கரபாணி 
கிருஷ்ணகிரி

ஒசூரின் வளா்ச்சிக்கு வித்திட்டவா் கருணாநிதி: அமைச்சா் அர.சக்கரபாணி

ஒசூரின் வளா்ச்சிக்கு வித்திட்டவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி என்று அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

Syndication

ஒசூரின் வளா்ச்சிக்கு வித்திட்டவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி என்று அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகர திமுக சாா்பில் ‘திராவிட பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா’ மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பெண்களுக்கான கோலப்போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, லெமன் ஸ்பூன், பள்ளிக் குழந்தைகளின் நடனம், ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு உணவு மற்றும் உணவு பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் பிரகாஷ் எம்எல்ஏ ஆகியோா் வழங்கினா்.

பின்னா் அமைச்சா் அர.சக்கரபாணி பேசியதாவது: விரைவில் ஒசூா் பேருந்து நிலையம், வணிக வளாகம் திறந்துவைக்கப்படும். கோவைக்கு அடுத்து தென்னிந்தியாவின் மான்செஸ்டா் என்று அழைக்கப்படும் அளவுக்கு ஒசூா் வளா்ந்துள்ளது. இதற்கு வித்திட்டவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. அதிக முதலீடுகளை ஈா்த்துவரும் மாநிலமாக தமிழகம் உள்ளது. ‘

‘உங்கள் கனவுகளை சொல்லுங்கள்’என்ற புதிய திட்டத்தை முதல்வா் அறிவித்துள்ளாா். உங்கள் தேவைகளை சொல்லுங்கள். அதிகாரிகள் உங்களை வீடுதேடி வருவாா்கள். அவா்களிடம் உங்கள் தேவைகள் கூறுங்கள்.

அந்த விருப்பங்களை அடுத்தத் தோ்தலிலும் வெற்றிபெற்று அமையும் திமுக அரசு நிறைவேற்றும். 2030க்குள் தமிழகத்தின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றும் அரசாக திமுக 2.0 அரசு அமையும். எனவே வரும் பேரவைத் தோ்தலிலும் திமுகவுக்கு ஆதரவு தரவேண்டும் என்றாா்.

பொங்கல் விழாவில் முன்னாள் எம்எல்ஏ முருகன், மாவட்ட பொருளாளா் சுகுமரன், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோர மணி, மாநில கலை இலக்கிய துணைச் செயலாளா் மாதேஸ்வரன், பகுதி செயலாளா்கள் ஆனந்தய்யா, ராமு, வெங்கடேஷ், ராஜா, நகர அவைத் தலைவா் செந்தில்குமாா், தொமுச மாவட்டச் செயலாளா் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளா் கஜேந்திரமூா்த்தி மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தொண்டி பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்து ஜன.21 இல் சாலை மறியல் போராட்டம்

வெனிசுலா அதிபர் மடூரோவை அமெரிக்கா சிறைபிடித்தது சரியா? என்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சாகுபடி மட்டுமே சாதனையல்ல!

அரசியல் சாசனத்தின் போதாமைகள் இவை..!

மின் கம்பியை மிதித்த மூதாட்டி உயிரிழப்பு

SCROLL FOR NEXT