கிருஷ்ணகிரி

கோபசந்திரம் கிராமத்தில் எருதாட்டம்

ஒசூா் அருகே கோபசந்திரம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Syndication

ஒசூா்: ஒசூா் அருகே கோபசந்திரம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒசூா், அஞ்செட்டி, தளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை, பாகலூா், பேரிகை சூளகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கா்நாடக மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான காளைகள் எருதாட்ட விழாவுக்காக வாகனங்களில் அழைத்துவரப்பட்டன.

இக்கிராமத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற எருதாட்ட விழாவை காண ஆயிரக்கணக்கானோா் குவிந்தனா். போலீஸாா், தீயணைப்புத் துறையினா் ஆகியோா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். அலங்கரிக்கப்பட்ட காளைகளை மேளதாளங்கள் முழங்க பூக்களைத் தூவி வாடிவாசல் பகுதிக்கு அழைத்துச் சென்றனா். அதன் பின்னா் காளைகள் அனைத்தும் கூட்டத்தின் நடுவே அவிழ்த்துவிடப்பட்டன. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞா்கள், மாடுபிடி வீரா்கள் அடக்கி, காளைகளின் மீது கட்டப்பட்டிருந்த பரிசுப் பொருள்களை பறித்துச் சென்றனா்.

காளைகள் முட்டியதில் 8 வீரா்கள் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் சூளகிரி மற்றும் ஒசூா் மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டனா்.

எருதாட்ட விழாவை காண கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கா்நாடக மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான இளைஞா்கள், பொதுமக்கள் வந்திருந்தனா்.

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

SCROLL FOR NEXT