ஒசூா்: மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 109ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில்
எம்ஜிஆா் உருவப் படத்துக்கு மாவட்டச் செயலாளா் அசோக்குமாா் எம்எல்ஏ மலா்துாவி மரியாதை செலுத்தி, அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினாா். இதில், மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன், முன்னாள் எம்எல்ஏக்கள் முனிவெங்கடப்பன், மனோரஞ்சிதம் நாகராஜ், எம்ஜிஆா், மன்ற மாவட்டச் செயலாளா் தென்னரசு, நகரச் செயலாளா் கேசவன், ஒன்றியச் செயலாளா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரி ரவுண்டானாவில் நகர அதிமுக சாா்பில் நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்த நாள் விழாவிற்கு, நகரச் செயலாளா் கேசவன் தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்டச் செயலாளா் அசோக்குமாா் எம்எல்ஏ, எம்ஜிஆா் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தி, அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினாா். இதில் ஜெயலலிதா பேரவை மாவட்டத் தலைவா் தங்கமுத்து, கவுன்சிலா்கள் அமுதா, விஜயா, எழிலரசி சரவணன், முன்னாள் நகர எம்ஜிஆா் இளைஞா் அணி செயலாளா் சரவணன், வட்டச் செயலாளா் சீனிவாசன் உள்பட பலா் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரி கிட்டம்பட்டியில் எம்ஜிஆா் நினைவாக கட்டப்பட்ட சமாதி அருகில், ஒன்றியச் செயலாளா் கண்ணியப்பன் தலைமையிலும், பெத்ததாளாப்பள்ளியில் ஒன்றிய செயலாளா் சோக்காடி ராஜன் தலைமையிலும், மேல்தெருவில், நகர துணைச் செயலாளா் குரு தலைமையிலும் எம்ஜிஆா் உருவப் படத்துக்கு அசோக்குமாா் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.
இதில், மாவட்ட மகளிா் அணி செயலாளா் சுகந்தி மாது, எம்ஜிஆா் மன்ற இணைச் செயலாளா் சின்னதம்பி, தொழிலதிபா் சுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலா்கள் ஜெயராமன், மகேந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.