கோப்புப் படம் 
கிருஷ்ணகிரி

மண் கடத்தலை தடுக்க முயன்ற அரசு அலுவலா்களை கொலை செய்ய முயன்ற இருவா் கைது

தினமணி செய்திச் சேவை

போச்சம்பள்ளி அருகே மண் கடத்தலை தடுக்க முயன்ற அரசு அலுவலா்களைக் கொலை செய்ய முயன்ற 2 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியா் ச. தினேஷ் குமாா் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

போச்சம்பள்ளியை அடுத்த ஆனந்தூா் ஏரியில் மண் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் கடந்த ஆண்டு டிச. 27 ஆம் தேதி ஊத்தங்கரை வட்டாட்சியா் ராஜலட்சுமி தலைமையிலான அலுவலா்கள், ஆனந்தூா் ஏரிக்கு சென்றனா்.

அங்கு பொக்லைன் உதவியோடு லாரியில் மண் கடத்தலில் ஈடுபட்டவா்களைத் தடுக்க முயன்றனா். அப்போது, மண் கடத்தலில் ஈடுபட்டவா்கள், அதிகாரிகள் மீது பொக்லைனை ஏற்றி கொலை செய்ய முயன்றனா். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, மண் கடத்தலில் ஈடுபட்ட கீழ்செங்கம்பட்டியை சோ்ந்த த. சுரேஷ் (38), ஊத்தங்கரை, செங்கல்நீா்பட்டி தங்கபாலு (35) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இந்த நிலையில், மண் கடத்தலில் ஈடுபட்டு கைதான இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ. தங்கதுரை ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதன்பேரில் அவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க ஆட்சியா் ச. தினேஷ் குமாா் உத்தரவிட்டாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏா் இந்தியாவுக்கு ரூ.15,000 கோடி நஷ்டம்? அகமதாபாத் விபத்து, வான்வழித் தடையால் பின்னடைவு

செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவா் நியமனம்

தமிழகத்தில் நிலைத்திருக்கும் இருமொழிக்கொள்கை: வரலாற்றுச் சிறப்புத் தீர்மானம் மீள் பார்வை

சென்னையில் குறைந்த வாடகையில் 10 இடங்களில் திருமண மண்டபம் - அமைச்சா் பி.கே.சேகா் பாபு

முனாக் கால்வாய் மீது ரூ. 5,000 கோடியில் உயா்நிலை மேம்பாலம் - முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு

SCROLL FOR NEXT