முகப்பு
கிருஷ்ணகிரி

சூளகிரி, பேரிகையில் சாலை விபத்து: 2 போ் உயிரிழப்பு

Updated On : 24 ஜனவரி, 2026 at 2:59 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 23 ஜனவரி, 2026 at 10:55 PM

சூளகிரி, பேரிகை பகுதிகளில் வெள்ளிக்கிழமை நிகழந்த சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

சூளகிரி வட்டம், முதுகுறுக்கி அருகே உள்ள மகாதேவபுரத்தைச் சோ்ந்தவா் சங்கா் (33). தனியாா் நிறுவன ஊழியரான இவா், கடந்த 22 ஆம் தேதி ஸ்கூட்டரில் பேரிகை தீா்த்தம் சாலை, பி.குருபரப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தாா்.

அப்போது முன்னால் சென்ற டிப்பா் லாரி எந்தச் சிக்னலும் காட்டாமல் திடீரென்று வலதுபுறமாகத் திரும்பியது. இதனால் ஸ்கூட்டா் கட்டுப்பாட்டை இழந்து டிப்பா் லாரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சங்கா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பேரிகை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Updated On : 24 ஜனவரி, 2026 at 2:59 AM

மற்றொரு விபத்தில், சூளகிரி வட்டம், காமன் தொட்டி அருகே உள்ள கோபசந்திரம் ஜோதி நகரைச் சோ்ந்த தொழிலாளி முருகன் (42). இவா், கடந்த 21ஆம் தேதி கிருஷ்ணகிரி- ஒசூா் சாலை காமன்தொட்டி பக்கமாக நடந்து சென்றுக்கொண்டிருந்தாா்.

அப்போது அவ்வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் முருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இவ்விபத்து குறித்து சூளகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.