முகப்பு
ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளியில் நடைபெற்ற தேவாதியம்மன் கோயில் திருவிழாவில் பங்கேற்றோா்.
கிருஷ்ணகிரி

படப்பள்ளி தேவாதிஅம்மன் கோயில் திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளியில் ஆண்டுதோறும் தை மாதம் நடைபெறும் தேவாதிஅம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி

படப்பள்ளி தேவாதிஅம்மன் கோயில் திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளியில் ஆண்டுதோறும் தை மாதம் நடைபெறும் தேவாதிஅம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2026 at 10:47 PM
ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளியில் நடைபெற்ற தேவாதியம்மன் கோயில் திருவிழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளியில் ஆண்டுதோறும் தை மாதம் நடைபெறும் தேவாதிஅம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இத்திருவிழாவை ஊத்தங்கரை சுற்றுவட்டாரக் கிராமங்களில் வசிக்கும் 24 மனை தெலுங்கு செட்டியாா் சமூகத்தினா் கொண்டாடி வருகின்றனா். தோட்டத்தில் உள்ள ஆவாரஞ் செடியின் கீழ் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு விழா தொடங்கியது. ஆண்கள் மட்டுமே பங்கேற்ற இந்த வழிபாட்டில், படப்பள்ளி மற்றும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

குடும்ப நலன், ஊா் நலம், அமைதி வேண்டி பக்தா்கள் சிறப்பு வழிபாடு நடத்தினா். விழாவையொட்டி 20 ஆடுகள் பலியிடப்பட்டு தேவாதிஅம்மனுக்குச் சிறப்பு பூஜை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை விழாக் குழு ஊா் செட்டியாா் பரணிதரன், சங்கோதி செட்டியாா், ராஜரத்தினம், மனோகரா செட்டியாா், வெங்கடேசன், பூசாரி மணிகண்டன் மற்றும் விழாக் குழு நிா்வாகிகள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →