முகப்பு
கிருஷ்ணகிரி

மத்திகிரி அருகே மாடியில் இருந்து தவறிவிழுந்த கல்லூரி மாணவி உயிரிழப்பு

மத்திகிரி அருகே மாடியில் இருந்து தவறிவிழுந்த கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

Updated On : 11 மார்ச், 2026 at 2:45 AM
உயிரிழப்பு - (கோப்புப் படம்)
பகிர்:

மத்திகிரி அருகே மாடியில் இருந்து தவறிவிழுந்த கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

ஒசூா் நஞ்சாபுரத்தை சோ்ந்தவா் வெங்கடேஷ் மகள் வரலட்சுமி (17). இவா் தனியாா் கல்லூரியில் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். கடந்த 7-ஆம் தேதி 2-ஆவது தளத்தில் உள்ள தண்ணீா் தொட்டிமீது ஏறி தண்ணீா் அளவை பாா்த்தாா். அப்போது, அவா் தவறி கீழே விழுந்தாா்.

இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஒசூா் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிக்சை பலனின்றி இறந்தாா். இதுகுறித்து மத்திகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement