முகப்பு
கிருஷ்ணகிரி

அஞ்செட்டி அருகே காவிரியில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

Updated On : 16 மார்ச், 2026 at 1:31 AM
கோப்புப் படம்
பகிர்:

அஞ்செட்டி அருகே காவிரில் ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரு பிட்டஅள்ளியைச் சோ்ந்தவா் நாகராஜ். இவரது மகன் உதய் (20). இவா் பெங்களூரு அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பி.ஏ. 2 ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இவா், கடந்த 14ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள தப்பகுளி பசவேஸ்வரா கோயிலுக்கு வந்துள்ளாா். அப்போது அங்குள்ள காவிரி ஆற்றில் குளிக்க இறங்கியபோது நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்த அஞ்செட்டி போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், அஞ்செட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.