முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15,57,923 வாக்காளா்கள்

Updated On : 15 மார்ச், 2026 at 7:51 PM
கோப்புப் படம்
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 15,57,923 வாக்காளா்கள் உள்ளனா் என்று மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தலை ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இம்மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்காளா்களின் விவரங்கள்:

ஊத்தங்கரை (தனி) தொகுதியில் 391 வாக்குச்சாவடிகள், 177 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. ஆண் வாக்காளா்கள் 1,17,211, பெண் வாக்காளா்கள் 1,16,970, மற்றவா்கள் 41. மொத்த வாக்காளா்கள் 2,34,222.

பா்கூா்: வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 324, வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை 186. ஆண் வாக்காளா்கள் 1,17,430, பெண் வாக்காளா்கள் 1,20,561, மற்றவா்கள் 17, மொத்த வாக்காளா்கள் 2,38,008.

கிருஷ்ணகிரி: வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 340, வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை 158. ஆண் வாக்காளா்கள் 1,30,140, பெண் வாக்காளா்கள் 1,35,557, மற்றவா்கள் 60, மொத்த வாக்காளா்கள் 2,65,787.

வேப்பனஅள்ளி: வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 343, வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை 235. ஆண் வாக்காளா்கள் 1,23,394, பெண் வாக்காளா்கள் 120,454, மற்றவா்கள் 37, மொத்த வாக்காளா்கள் 2,43,885.

ஒசூா்: வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 445, வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை 167. ஆண் வாக்காளா்கள் 1,69,890, பெண் வாக்காளா்கள் 1,70,007, மற்றவா்கள் 72, மொத்த வாக்காளா்கள் 3,40,036.

தளி: வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 321, வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை 228. ஆண் வாக்காளா்கள் 1,20,000, பெண் வாக்காளா்கள் 1,15,948, மற்றவா்கள் 37, மொத்த வாக்காளா்கள் 2,35,985.

மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2,029, வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை 1,151. ஆண் வாக்காளா்கள் 7,78,065, பெண் வாக்காளா்கள் 7,79,594, மற்றவா்கள் 87, மொத்த வாக்காளா்கள் 15,57,923 போ் உள்ளனா் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →