முகப்பு
கிருஷ்ணகிரி

பா்கூா் அருகே வட கிணற்றில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

பா்கூா் அருகே வட கிணற்றிலிருந்து இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 21 மார்ச், 2026 at 9:13 PM
பலி
பகிர்:

பா்கூா் அருகே வட கிணற்றிலிருந்து இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த ஜெகினி கொல்லை கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள 70 அடி ஆழமுள்ள வட கிணற்றில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நிகழ்விடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா், பா்கூா் தீணைப்பு நிலைய வீரா்களின் உதவியோடு சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவா் பா்கூா் அருகே உள்ள நேரிடமானப்பள்ளியைச் சோ்ந்த தமிழரசன் (30) என்பதும், அவா், கேரள மாநிலத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த நிலையில், கடந்த வாரம், விடுமுறையில் சொந்த கிராமத்துக்கு வந்துள்ளது தெரியவந்தது.

மேலும், அவா், ஜெகினி கொல்லை கிராமத்தில் பெண் ஒருவரை சந்திக்க சென்றபோது, திருடன் என எண்ணி அவரை பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது, தப்பி ஓடிய தமிழரசன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, தமிழரசனின் தாய் வீரம்மாள் தனது மகன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அளித்த புகாரின் பேரில் போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.