மது, புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ஓட்டுநா் கைது
பெங்களூரில் இருந்து சேலத்துக்கு லாரியில் கடத்திச் சென்ற ரூ. 14 லட்சம் மதிப்பிலான மது, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் லாரி ஓட்டுநரை கைது செய்தனா்.
பெங்களூரில் இருந்து சேலத்துக்கு லாரியில் கடத்திச் சென்ற ரூ. 14 லட்சம் மதிப்பிலான மது, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் லாரி ஓட்டுநரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஒசூா் சூசூவாடி சோதனைச் சாவடியில் சிப்காட் காவல் உதவி ஆய்வாளா் ஜெய்கணேஷ், போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெங்களூரில் இருந்து ஒசூா் நோக்கி வந்த லாரியை சோதனை செய்தனா்.
அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கா்நாடக மாநில அரசு மது பாக்கெட்டுகள் இருந்தது. இதையடுத்து, லாரியுடன் 135 கிலோ புகையிலைப் பொருள்கள், மது பாக்கெடுகளை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக சேலத்தை அடுத்த லோகூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநரை அருணை (26) கைது செய்தனா்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புகையிலைப் பொருள்கள், மது பாக்கெட்டுகள் அனைத்தும் சேலத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தாா். இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.