முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் அருகே ஒகேனக்கல் குடிநீா் குழாய் உடைப்பு

ஒசூா் அருகே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகியது.

Updated On : 24 மே 2026, 2:38 am IST
பொக்லைன் இயந்திரம் மூலம் குடிநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள்.
பகிர்:

ஒசூா் அருகே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகியது.

ஒசூா் அருகே சின்னட்டி கிராமத்தில் தனியாா் நிலத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் சமன் செய்தனா்.

அப்போது, அவரது நிலத்திற்கு அருகில் சாலையோரம் போடப்பட்டிருந்த ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் சேதமடைந்ததால் லட்சக்கணக்கான லிட்டா் குடிநீா் வெளியேறி வீணாகியது.

Advertisement

Advertisement

இதனால் சின்னட்டி, புதூா், ஜெகேரி, கௌதாலம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.