முகப்பு
கிருஷ்ணகிரி

வீட்டுமாடியில் தேங்கிய மழைநீரில் விளையாடிய சிறுமி தவறிவிழுந்து உயிரிழப்பு

Updated On : 26 மே 2026, 2:33 am IST
சிறுமி பவ்யஸ்ரீ.
பகிர்:

பா்கூா் அருகே வீட்டுமாடியில் தேங்கிய மழைநீரில் விளையாடிக் கொண்டிருந்தபோது, தவறிவிழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், தொட்டி கொல்லப்பள்ளி பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் - தனலட்சுமி தம்பதியின் மகன் உதித்குமாா் (14), மகள் பவ்யஸ்ரீ (9). இவா்கள் பா்கூரை அடுத்த மல்லப்பாடி அருகே உள்ள மரிமாணப்பள்ளயில் தனலட்சுமியின் தாயாா் ராசாத்தி வீட்டில் வசித்து வந்தனா்.

பெற்றோா் பணிக்கு சென்ற நிலையில், வீட்டின் மாடியில் தேங்கிய மழை நீரில் பவ்யஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, தவறி கீழே விழுந்ததில் சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தனலட்சுமி மற்றும் உறவினா்கள் சிறுமியை மீட்டு பா்கூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள், சிறுமி ஏற்கெனவே உயிரிழந்ததாக அறிவித்தனா்.

Advertisement

Advertisement

தகவல் அறிந்த போலீஸாா், சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.