நாமக்கல்

பசுமை தாயகம் சார்பில் நிலவேம்பு கஷாயம் விநியோகம்

தினமணி

நாமக்கல் மாவட்ட பாமக மற்றும் பசுமை தாயகம் அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
 நாமக்கல் மாவட்ட பாமக மற்றும் பசுமை தாயகம் அமைப்பு சார்பில், வேகமாகப் பரவிவரும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல் பேருந்து நிலையத்தில் துண்டறிக்கைகள் விநியோகம் செய்யப்பட்டன.
 மேலும், காய்ச்சல் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக பசுமை தாயகம் அமைப்பினர் மக்களிடம் விளக்கிக் கூறியதுடன், சுமார் 1,000 பேருக்கு நிலவேம்பு கஷாயத்தையும் வழங்கினர்.
 இந் நிகழ்ச்சியை பாமக மாநில துணைப் பொதுச் செயலர் பொன்.ரமேஷ் தொடக்கி வைத்தார். மாவட்ட இளைஞர் சங்கத் தலைவர் பிரபாகரன், அமைப்புச் செயலர் சுதாகர், நகர முன்னாள் செயலர் ராஜா, பசுமைத் தாயகம் மாவட்ட அமைப்பாளர் ராமசாமி, புதுச்சத்திரம் ஒன்றியச் செயலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT