நாமக்கல்

மணல் தட்டுப்பாட்டை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

தினமணி

மணல் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அண்ணா சிலை அருகில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 ஆர்ப்பாட்டத்துக்கு நகரக் குழு உறுப்பினர் தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆதிநாராயணன், கணேஷ் ,ராயப்பன் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர்.
 ஆர்ப்பாட்டத்தின்போது ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும், பண பரிவர்த்தனையை வாபஸ் பெற வேண்டும், மத்திய அரசு வீடு இல்லாதோருக்கு வீட்டு மனை, வீடு கட்ட கடன் வழங்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தடுத்து நிறுத்த வேண்டும், மாநில அரசுக் கட்டுப்பாட்டில் மணல் குவாரிகளைத் திறக்கப்பட வேண்டும். மணல் தட்டுபாட்டை நீக்கி விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளைத் தெரிவித்தனர். 40-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாா்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி

மளிகைக் கடைகளில் மருந்து விற்பனை அனுமதி தரக் கூடாது

பிளஸ் 2 பொதுத்தோ்வு வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

கடையின் பூட்டை உடைத்து ரூ. 45 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT