நாமக்கல்

மாணவர்களின் தனித் திறனை வெளிப்படுத்தும் விதமாக கண்காட்சி

DIN

பரமத்தி மலர் பப்ளிக் பள்ளியில் மாணவர்களின் தனித் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக கண்காட்சி நடைபெற்றது.
பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி மலர் பப்ளிக் பள்ளியில் மாணவர்களின் 150-க்கும் மேற்பட்ட படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. கண்காட்சியை பள்ளியின் தலைவர் பழனியப்பன் துவக்கி வைத்தார். இதில் சுற்றுச்சூழல் மாசுபாடு, எலக்ட்ரானிக் தொழில்நுட்பம், எளிய முறையில் மின்சாரம் தயாரிப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட படைப்புகள் இடம்பெற்றிருந்தன. கண்காட்சியில் பள்ளியின் செயலாளர் கந்தசாமி,பொருளாளர் வெங்கடாஜலம், பள்ளியின் முதல்வர் கிருஸ்துநாயர் மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள் பார்வையிட்டுப் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

SCROLL FOR NEXT