நாமக்கல்

வீட்டுக்குள் புகும் சாக்கடை கழிவுநீர்: நடவடிக்கையெடுக்க கோரிக்கை

DIN

மழை பெய்தால் சாக்கடை  கால்வாய் நிரம்பி வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.  இதனைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் நகராட்சி தில்லைபுரம் முதல் குறுக்குச் சாலை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள்,  நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் பி.பாலசுப்ரமணியனிடம் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்: தில்லைபுரம் முதல் குறுக்குச் சாலையில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.  இங்கு மழைக் காலத்தில் சாக்கடை கால்வாய் நிரம்பி வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்து விடுகிறது.  இதனால் இப் பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.  மேலும்,  கழிவு நீர் வீடுகளுக்குள் புகுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இதனால் ஆணையர் இந்த பகுதியைச் நேரில் ஆய்வு செய்து,  மழைக் காலத்தில் சாக்கடை கழிவு நீர் வீடுகளுக்குள் புகாமல் தடுக்க உரிய நடவடிக்கையெடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT