நாமக்கல்

ஆகஸ்ட் 2, 3-இல் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: ஆட்சியர் தகவல்

தினமணி

கொல்லிமலையில் ஆகஸ்ட் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் வல்வில் ஓரி விழா நடத்தப்பட இருப்பதாக ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார்.
 நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆண்டுதோறும் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர்க் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு விழா கொண்டாடுவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
 இதில் அவர் பேசியது: கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியை போற்றிடும் வகையில், ஆண்டுதோறும் ஆடி மாதம் 17 மற்றும் 18-ஆம் தேதிகளில்
 தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா கொல்லிமலையில் கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு வரும் ஆகஸ்ட் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா கொல்லிமலையில் உள்ள வல்வில் ஓரி அரங்கில் கொண்டாடப்பட உள்ளது.
 இந்த விழாவையொட்டி, செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் விளக்க கண்காட்சி அமைக்கப்பட உள்ளது.
 மேலும், கொல்லிமலை வாசலூர்பட்டி தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் மலர்க் கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் கொல்லிமலை முழுவதும் தூய்மைப் பணியினை விழாவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பாராட்டும் வகையில் மேற்கொள்ள வேண்டும்.
 மேலும், விழாவில் பங்கேற்க வரும் பொதுமக்களுக்கு குடிநீர், கழிப்பிடம், போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் முழுமையாக செய்திட வேண்டும். கொல்லிமலையில் பிளாஸ்டிக் பொருள்கள், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, கொல்லிமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஈடுபாட்டுடன் மேற்கொண்டு, விழாவினை பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் பாராட்டும் வகையில் சிறப்பாக நடத்திட வேண்டும் என்றார்.
 இதில், மாவட்ட வன அலுவலர் ரா.காஞ்சனா, நாமக்கல் சார்-ஆட்சியர் சு.கிராந்தி குமார் பதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுஜாதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சி.மாலதி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பி.பாலமுருகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சீனிவாசன் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT