முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோடு அருகே  இரு கார்கள் மோதல்: 4 பேர் பலி

திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையத்தில் நேருக்கு நேராக இரு கார்கள் மோதியதில் நால்வர் உயிரிழந்தனர்.

Updated On : 23 ஜூலை 2018, 9:40 am IST
பகிர்:

திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையத்தில் நேருக்கு நேராக இரு கார்கள் மோதியதில் நால்வர் உயிரிழந்தனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் பச்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன்(56) . கார் மெக்கானிக்.  இவரது மனைவி சவீதா(48).  தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களது மகன் அஸ்வந்த்(25) . இவர்கள் மூவரும் ஞாயிற்றுக்கிழமை ராசிபுரத்துக்கு உறவினரைக் காண குடும்பத்துடன் தங்களது காரில் பயணித்தனர். காரை பிரபாகரன் ஓட்டி சென்றுள்ளார்.
இவர்களது கார் எலச்சிபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்த போது,  எதிரில் பெங்களூரு ஆனந்தபுரா பகுதியைச் சேர்ந்த பிரதீப்(35),  ஷியாம்குமார்(38),  சுனில்குமார்(31), ஆல்ப்ர்ட் ஜான்(31) ஆகியோர் செளரிபாளையம் பகுதி மாதா கோயில் திருவிழாவில் பங்கேற்று விட்டு, காரில் திரும்பி வந்துள்ளனர்.  இவர்களது இரண்டு கார்களும் எலச்சிபாளையம் பகுதியில் மோர்பாளையம் பிரிவு சாலையில் ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டையும் மீறி நேருக்கு நேராக மோதின.  வேகமாக மோதியதால், ஏற்பட்ட விபத்தில் இரு கார்களும் பலத்த சேதமடைந்தன.  காரில் குடும்பத்துடன் பயணித்த பிரபாகரன்,  சவீதா, அஸ்வந்த் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.   மற்றொரு காரில் வந்த ஆல்பர்ட் ஜான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
     பலத்த காயமடைந்த ஷியாம் குமார், சுனில்குமார், பிரதீப் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு,  சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து எலச்சிப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments