நாமக்கல்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

DIN

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி நாமக்கல்லில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். 
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.  மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்.  மத்திய அரசு ஓய்தியர்களுக்கு வழங்குவது போல் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000, மாத நிலுவைத் தொகை மற்றும் மூன்றாம் விருப்ப ஓய்வூதிய நிர்ணயம் ஆகியவற்றை வழங்க வேண்டும். 
கம்முடேஷன் பிடித்தம் செய்வதை 10 ஆண்டுகளாக குறைக்க வேண்டும்.  ஓய்வூதியர் அனைவருக்கும் வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கம் எழுப்பினர்.
சங்க மாவட்டச் செயலர் இளங்கோவன், மின் வாரிய ஓவ்வூதியர் நல அமைப்பு மாவட்டத் தலைவர் காளியப்பன் மற்றும் சங்க நிர்வாகிகள்
பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT